மொரட்டுவ, சொய்சாபுர பகுதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் நடாத்தி, பொலிசார் முன்னிலையிலேயே துப்பாக்கிச் சூடும் நடாத்தியிருந்த நிலையில் சந்தேக நபர்கள் சிலரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
டுபாயிலிருந்து இயங்கும் பாதாள உலக பேர்வழி, தர்மே என அறியப்படும் எல்லாவல லியனகே தர்மசிறி பெரேரா என்ற நபரே சம்பவத்தின் சூத்திரதாரியெனவும் குறித்த நபருடன் தொலைபேசியில் உரையாடல்களை மேற்கொண்ட பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பெண்ணிடம் ஹெரோயின் இருந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment