ஓகஸ்ட் 1ம் திகதி முதல் இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகையை ஆரம்பிப்பதன் நோக்கில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
ஆகக்குறைந்தது ஐந்து இரவுகள் இலங்கையில் தங்கியிருப்பதோடு, வருவதற்கு முன்பதாக கொரோனா தொற்றில்லையென்பதை நிரூபிப்பதற்கான PCR பரிசோதனை சான்றிதழ் மற்றும் மருத்துவ காப்புறுதியும் அவசியம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை விமான நிலையத்திலும் PCR பரிசோதனை நடாத்தப்படும் எனவும் 4-6 மணி நேரத்துக்குள் முடிவினைப் பெற்றுக் கொள்ள முடியாவிட்டால் முதல் 24 மணி நேரம் மாத்திரம் தமக்கு விரும்பிய , அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்க முடியும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கட்டாய தனிமைப்படுத்தல் இல்லாவிடினும், விமான நிலையத்தில் வைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment