ஜுன் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான அறிவிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை வழக்குகளை விசாரிப்பதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை நாளை 3 மணியளவில் உச்ச நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழு மனுக்களை பத்தாவது நாளாக ஆராய்ந்துள்ள நிலையில் நாளை தீர்மானம் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, நீதிமன்ற தீர்ப்பையடுத்தே புதிய தேதி குறிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment