இன்றைய தினம் எதிர்பார்த்தபடி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லையாயினும், இவ்வாரத்திற்குள் அதனை முடிவு செய்யப் போவதாக தெரிவிக்கிறார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
நீதிமன்ற தீர்ப்பினையடுத்து தேர்தலை நடாத்துவதில் தடையேதுமில்லையென தெளிவானதன் பின்னணியில் இன்று புதிய தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
எனினும், இவ்வாரத்திற்குள் முடிவை அறிவிக்கப் போவதாக இன்று விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment