கிளிநொச்சி பகுதியில், இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 24 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குழுவொன்று வாகனத்தை நிறுத்தாமல் பயணித்த போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பளை பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன் துப்பாக்கிச் சூட்டுக் காயத்தோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாகவும் தகுந்த மருத்துவ வசதி இல்லையெனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றமையும் ஏ9 வீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment