மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுடன் கொரோனா சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கு உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், இம்முறை ஹஜ் கடமைக்கு வெளிநாட்டிலிருந்து வருவதற்கு அனுமதி வழங்கப் போவதில்லையென அறிவித்துள்ள சவுதி அரேபியா மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் உள்நாட்டில் வாழும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு வாய்ப்பளிக்கவுள்ளதாக தெரிவிக்கிறது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்து எதுவும் இன்னும் கண்டு பிடிக்கப்படாத நிலையில், இம்முறை, சவுதி பிரஜைகள் உட்பட நாட்டில் குடியிருப்போருக்கு மாத்திரமே ஹஜ்ஜுக்கான அனுமதி வழங்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment