மொரட்டுவ, சொய்சாபுர பகுதி உணவகம் ஒன்றிற்குள் புகுந்து தாக்குதல் நடாத்தியதோடு பொலிசார் முன்னிலையிலேயே துப்பாக்கிப் பிரயோகமும் செய்த குழுவிலிருந்து மேலும் இருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கப்பம் கோரியதன் பின்னணியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் உணவகம் சேதப்படுத்தப்பட்டிருந்ததுடன் பொலிஸ் பாதுகாப்பை சவாலுக்குட்படுத்தும் வகையில் துப்பாக்கிப் பிரயோகமும் இடம்பெற்றிருந்தது.
அத்தருணத்தில் வேடிக்கை பார்த்த பொலிசார் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் மேலதிக கைதுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment