கிரான்: புலிகளால் கைவிடப்பட்ட ஆயுதங்கள் மீட்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 13 June 2020

கிரான்: புலிகளால் கைவிடப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

https://www.photojoiner.net/image/BWVRtCUu

கிரான் பிரதேச செயலாளர்பிரிவிற்குட்பட்ட வாகனேரி குளத்துமடு பகுதியில் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட சில ஆயுதங்கள்இன்று வெள்ளிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். 

வாழைச்சேனை கடதாசி ஆலை புலனாய்வுபிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் வாகனேரிகுளத்துமடு காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் முகாம்இருந்த பகுதியில் சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதில் ஐந்து கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களைகொண்டு செல்வதற்கான அணியும் ஆடை ஒன்றும் மீட்கப்பட்டு வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைத்துள்ளதாகவாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார். 

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment