சிறைக்கூடத்துக்கு வெளியில் இருக்க வழங்கப்படும் நேரம் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரி வெலே சுதா மற்றும் கஞ்சிபானை இம்ரான் உட்பட்ட குழுவினர் மேற்கொண்டிருந்த உண்ணாரவிரதம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோரிக்கையை நிறைவேற்ற முடியாவிடினும் கூட இது குறித்து சாதகமான பதில் ஒன்றை மூன்று தினங்களுக்குள் தருவதாக சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதியை அடுத்து குறித்த நபர்கள் தமது உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளனர்.
இதேவேளை சிறைச்சாலைக்குள் தகவல் தொழிநுட்ப உபகரணங்கள் கடத்தப்படுவது குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment