பெருமளவு கடற்படையினர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த வெலிசர கடற்படை முகாமை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியாக கடற்படையினர் குணமடைந்து வருகின்ற நிலையில் முகாமை ஓரிரு தினங்களுக்குள் வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஜாஎல - சுதுவெல்ல பகுதியில் தனிமைப்படுத்தலைத் தவிர்த்து வந்த நபர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாய் ஒருவர் ஊடாக முகாமில் நூற்றுக்கணக்கானோர் தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment