கடந்த மே மாதம் 30ம் திகதி மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பொன்றில் துப்பாக்கிச் சூடு நடாத்தி ஒருவரைக் காயப்படுத்திய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தில் 35 வயது நபர் ஒருவர் காயமுற்றிருந்த அதேவேளை கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 31 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், கப்பம் கோருதல் என சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment