ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் பங்கேற்று, பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தொடர்பில் ஞானசார தெரிவித்த விடயங்கள் அவதானிக்கப்பட்டு வரும் நிலையில் யூசுப் அல்-கர்ளாவி தொடர்பிலான கூற்றுக்கு எகிப்திய தூதரகம் பதிலளித்துள்ளது.
அதில், கர்ளாவி 1960 முதல் கட்டாரில் வசித்து வரும் அவர் அந்நாட்டு பிரஜையெ அன்றி எகிப்திய பிரஜையில்லையென விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை அரசுக்குத் தேவையான உதவிகளை செய்யவும் தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கொள்கை அமைப்புகள் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் வேரூன்றியிருக்கும் அதேவேளை அவற்றின் ஊடாக இலங்கை முஸ்லிம்கள் தீவிரமயப்படுத்தப்பட்டிருப்பதாக அண்மையில் ஞானசார ஆணைக்குழுவில் விளக்கமளித்திருந்ததோடு சில அமைப்புகளின் பெயர் குறிப்பிட்டுக் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment