பல்வேறு குற்றச்செயல்களுக்காக தேடப்பட்டு வந்த பாதாள உலக பேர்வழி அக்கு என அறியப்படும் தனிப்புலி ஆராச்சிகே புத்திக ஜயதிலக மற்றும் சகாக்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்துனில் குமார என்ற இயற்பெயர் கொண்ட 'இந்ரா' எனும் நபரும் இதில் உள்ளடக்கம் எனவும் கைதானவர்களிடம் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விசேட அதிரடிப்படையினரால் ஹன்வெல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment