தனியார் பேருந்து கட்டணங்களை உயர்த்த எக்காரணங்கொண்டும் அனுமதிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர.
ஆசனங்களின் இருக்கை அளவுக்கே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற புதிய நிபந்தனையின் பின்னணியில் பேருந்து சேவைகள் இழப்பை சந்திக்க நேர்வதாகவும் அதனால் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளமையும் வருமானப் பற்றாக்குறையைத் தீர்க்க மாற்று வழிகள் ஆராயப்படும் என விளக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment