மாகந்துரே மதுஷ் விவகாரத்தின் பரபரப்புக்கு மத்தியில் கைது செய்யப்பட்ட கஞ்சிபானை இம்ரானின் சிறைக்கூடத்திலிருந்து தொலைபேசி மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபருக்கு சாப்பாட்டு பார்சலுக்குள் வைத்து கைத் தொலைபேசியொன்றை கொடுக்க முயன்றதாக இந்நபரின் தந்தையும் சகோதரனும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தற்போது சிறையிலிருந்தே இவ்வாறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment