அளுத்கம, அம்பகஹ சந்தியில் வைத்து மூளை வளர்ச்சி குன்றிய சிறுவன் தாரிக் தாக்கப்பட்ட விவகாரத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பொலிசார், அவ்வேளையில் கடமையைச் செய்யத் தவறியதாக தெரிவித்து மூன்று பொலிசாரை இடைநிறுத்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
சப் இன்ஸ்பெக்டர், சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் தரத்திலுள்ள மூவரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குறித்த மூவருக்கும் அன்றைய சம்பவத்துக்குமான தொடர்பு குறித்து விளக்கமளிக்கப்படவில்லையென்பதோடு மே 25ம் திகதி பொலிசார் சிறுவன் தாரிக்கை தாக்கவில்லையென பொலிஸ் தரப்பு ஏலவே விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment