கருணாவை விசாரிக்குமாறு சிங்ஹல ராவய 'வேண்டுகோள்' - sonakar.com

Post Top Ad

Saturday, 20 June 2020

கருணாவை விசாரிக்குமாறு சிங்ஹல ராவய 'வேண்டுகோள்'

https://www.photojoiner.net/image/JNZ55IZn

ஆனையிறவு மாத்திரமன்றி அம்பாறையிலும் பௌத்த பிக்குகளைக் கொன்று குவித்த கருணா அம்மான், தற்போது தனது வாயாலேயே தான் செய்த குற்றத்தை 'வெளிப்படையாக' தெரிவித்துள்ள நிலையில் அவரை விசாரணைக்குட்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சிங்ஹல ராவய.

பொது பல சேனாவின் பங்காளி மாகல்கந்தே சுதத்த தேரர் இன்று இவ்வாறு தெரிவித்துள்ள அதேவேளை ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் கடும் மௌனம் சாதித்து வருகின்றனர்.

ஒரே இரவில் 3000 வரையான இரணுவத்தினரை ஆனையிறவில் கொன்றொழித்ததாகக் கூறிய கருணா அம்மான் கிளிநொச்சி எண்ணிக்கையை இன்னும் வெளியிடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment