மாளிகாவத்தை பகுதியில் ரமழான் மாதத்தில் பணப் பங்கீட்டைப் பெறுவதற்காக காத்திருந்த மூவர் சன நெரிசலில் சிக்குண்டு உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் கைது செய்யப்பட்டிருந்த ஏழு சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தினம் அங்கு மக்கள் ஒன்று கூடப் போவதை பொலிசார் அறிந்திருந்ததற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிசாருக்கு எதிராகவும் உள்ளக விசாரணைகள் இடம்பெறுகின்றன. இப்பின்னணியில் சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என முன் வைத்த கோரிக்கையை நீதிபதி ஏற்றதன் பின்னணியில் தலா 150,000 ரூபா சரீரப் பிணையில் கைதான ஏழு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையிலான குழுவினர் இவ்வாறு கைதானவர்கள் சார்பில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment