உலகறிந்த விடயமொன்றைத் தான் நான் கூறியிருக்கிறேன், அதை வைத்து என்னை யாரும் கைது செய்ய முடியாது என தெரிவிக்கிறார் விநாயகமூர்த்தி முரளிதரன்.
ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்று குவித்த ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க, விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சியினர் எல்லாம் என்னைக் கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கத் தகுதியற்றவர்கள். அத்துடன் நான் புதிதாக எதையும் சொல்லவில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
வரலாறு தெரிந்தவர்களுக்கு நான் உண்மையைத் தான் சொல்லியிருக்கிறேன் என்பது புரியும் எனவும் அதை அடிப்படையாக வைத்து தன்னைக் கைது செய்ய முடியாது எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment