கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்களை புதைப்பது சூழலுக்கு பாதிப்பைத் தரும் என நீதிமன்றில் இன்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் வழி காட்டலுக்கு முரணாக இலங்கையில் மாத்திரம் உடலங்கள் கட்டாயமாக எரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டமை தமது அடிப்படை உரிமை மீறல் என நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவ்வாறு உடலங்களைப் புதைத்தால் நிலத்தடி நீரூடாகவும் மண் ஊடாகவும் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பிருப்பதாக பேராசிரியர் மெதிக விதானகேயின் அறிக்கையை நீதிமன்றில் இன்று சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன சமர்ப்பித்துள்ளார்.
இந்நிலையில், வழக்குகளின் விசாரணை தொடர்பில் ஜுலை 13ம் திகதி ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment