பி'சேனை: பெண்ணொருவர் சடலமாக மீட்பு; பொலிஸ் விசாரணை - sonakar.com

Post Top Ad

Thursday, 11 June 2020

பி'சேனை: பெண்ணொருவர் சடலமாக மீட்பு; பொலிஸ் விசாரணை


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை ஹுசைன் வைத்தியர் வீதியைச் சேர்ந்த வெள்ளக் குட்டி ரகுமத்தும்மா வயது (60) என்பவர் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (11) வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை குறித்த பெண்மணியின் வீட்டுக்கு சென்ற உறவினர் ஒருவர் குறித்த பெண்மணி ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-எச்.எம்.எம்.பர்ஸான் 

No comments:

Post a Comment