குருநாகல் போதனா வைத்தியசாலையின் புதிய பதில் பணிப்பாளர் இன்று நியமிக்கப்பட்டமையோடு கூரையின் மேல் ஏறி ஐந்து தினங்களாக நடத்திவந்த எதிர்ப்பு போராட்டம் இன்று முதல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
குருநாகல் போதனா வைத்தியசாலையின் புதிய பதில் பணிப்பாளராக வடமேல் மாகாண சுகாதாரப் பணிமனையின் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்திய அதிகாரி என். பரீத் இன்று முதல் சேவையைப் பொறுப்பேற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் வீர பண்டாரவுக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரணை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சினால் அவருக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல் உள்ள நிலையில் அந்தப் பதவிக்காக தற்காலிமாக இந்;தப் புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்காலிகமான புதிய பணிப்பாளர் நியமனத்துடன் வைத்திய அதிகாரி சரத் வீர பண்டாரவுக்கு எதிராக வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இருவர்கள் கூரையின் மேல் ஏறி ஐந்து தினங்களாக நடத்திவந்த எதிர்ப்பு போராட்டம் இன்று முதல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் புதிய பதில் பணிப்பாளராக அரச கடமைப் பொறுப்பையேற்றுள்ள வடமேல் மாகாண சுகாதாரப் பணிமனையின் பணிப்பாளர் என். பரீத் கருத்து தெரிவிக்கையில் வைத்தியர் சரத் வீர பண்டார இன்று வைத்தியசாலைக்கு சமூகமளிக்க வில்லை. சரத் வீர பண்டாரவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரணை மேற்கொள்வதற்காக அவர் தற்காலிமாக சுகாதார அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ளார்.
வைத்தியர் வீர பண்டார வைத்தியர் சாபி சஹாப்தீன் தொடர்பில் தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவதிலேயே கவனம் செலுத்தினார்.
-இக்பால் அலி
No comments:
Post a Comment