ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் அவர்களது காணொளிப் பதிவில் தன்னை ஒரு பிசாசு (ඥානසාර යක්ෂයා) என வர்ணித்திருப்பதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் விளக்கமளித்துள்ளார் ஞானசார.
வஹாபிசத்துக்கு எதிராகவும் அதன் கற்பிதங்களுக்கு எதிராகவும் பேசி வந்ததனாலேயே தன்னை சஹ்ரான் குழுவினர் அவ்வாறு வர்ணித்திருப்பதாக தெரிவிக்கின்ற அவர், இலங்கையில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் 60 வீதமான புராதன தளங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் ஆணைக்குழுவில் விபரித்துள்ளார்.
ஆணைக்குழுவில் தானாகச் சென்று சாட்சியமளித்து வரும் ஞானசார, தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகத்தின் உட்கட்டமைப்பு என்ற தனது கற்பனையையும் பதிவாக்கி வருகின்ற அதேவேளை, அங்கு இடைக் கேள்விகளை முன் வைக்கும் அளவுக்கு யாருடைய பிரசன்னமுமில்லையென்பதும் நேற்றிரவு 11.30 வரையிலும் ஞானசார சாட்சியமளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment