மெட்ச் விற்பனையில் திலங்க சுமதிபால விற்பன்னர்: மஹேல - sonakar.com

Post Top Ad

Sunday, 21 June 2020

மெட்ச் விற்பனையில் திலங்க சுமதிபால விற்பன்னர்: மஹேல

https://www.photojoiner.net/image/wS2lezMh

2011 உலக கிண்ண கிரிக்கட் இறுதியாட்டத்தைப் பணத்தைப் பெற்றுக் கொண்டு கோட்டை விட்டதாக அண்மையில் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அதனை சர்வதேச கிரிக்கட் கவுன்சிலில் முறையிடுமாறு சங்கக்கார, அரவிந்த போன்றோர் கருத்துரைத்திருந்த அதேவேளை விளையாடிய வீரர்களால் அன்றி வேறு யாரால் அவ்வாறு செய்திருக்க முடியும் எனவும் தேர்தல் சர்கஸ் நடைபெறுவதாகவும் மஹேல பதிலுரைத்திருந்தார்.

எனினும், தமக்கு தொடர்பில்லாத விடயத்துக்கு அவர் ஏன் பதில் சொல்ல வேண்டும் என திலங்க கேள்வியெழுப்பியிருந்த நிலையில், அப்படியாயின் இனிமேல் பதில் கருத்துகள் வெளியிட முன்னர் ஆட்ட நிர்ணய சதி விற்பன்னரான திலங்கவிடம் கேட்டுவிட்டு தலையிடலாம் என மஹேல பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment