முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த மேலும் ஒரு சந்திப்பு தேர்தல் அதிகாரிகளின் தலையீட்டால் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்களை வழங்க ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, வார இறுதியில் ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளுடன் பொலன்நறுவ, அரலிய ஹோட்டலில் இடம்பெறவிருந்த நிகழ்வொன்றும் தேர்தல் விதிகளை மீறும் செயல் எனக் கூறி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தான் தனக்கு நெருங்கியவர்களுடன் நிகழ்வொன்றை நடாத்துவதற்கு இவ்வாறு அத்துமீறல் இடம்பெற்றுள்ளதாகவும் இலங்கை வரலாற்றில் முன்னொரு போதும் இவ்வாறு நடந்ததில்லையெனவும் மைத்ரி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment