ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கலந்து கொண்டிருந்த தொழிற்சங்க உறுப்பினர்களுடனான கூட்டம் அமளியினால் இடை நிறுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கட்சி முக்கியஸ்தர்கள் தமக்காக குரல் கொடுப்பதில்லையென குற்றஞ்சாட்டிக் குரல் எழுப்பப் பட்டிருந்த நிலையில் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
ஈற்றில், நாளைய தினம் ரணில் விக்கிரமசிங்கவுடனான பிரத்யேக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment