கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை முயற்சியை முறியடிப்பதில் பங்காற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
11ம் திகதி குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளோடு டிபன்டர் ரக வாகனம் ஒன்று மோதியதன் பின்னணியில் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
22 வயதான குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று காலை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment