உலகின் அரிய வகை செம்மறி இனத்தைச் சேர்ந்த ஆடொன்றைக் கொன்றதைத் தவிர வேறு எதையும் சாதிக்காத அமெரிக்க ஜனாதிபதியின் புதல்வனின் மொங்கோலியாவுக்கான வேட்டை சுற்றுலா பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியின் புதல்வன் என்ற அடிப்படையில் நாட்டின் இரகசிய பொலிசார் மற்றும் பாதுகாப்பு படையினரை பயன்படுத்தும் வசதியுள்ள பின்னணியில் கடந்த ஓகஸ்ட்டில் இடம்பெற்றுள்ள இப் பயணத்துக்கு 75000 டொலர் செலவு செய்து தமது வசதிகளை குறித்த நபர் அனுபவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பயணத்தின் போது ட்ரம்பின் புதல்வன் மொங்கோலிய ஜனாதிபதியையும் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒபாமா குடும்பத்தை விட 1000 மடங்கு அதிக சுற்றுலா நடவடிக்கைகளில் ட்ரம்ப் குடும்பம் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment