எதிர்வரும் ஓகஸ்ட் 5ம் திகதி பெரும்பாலும் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுகின்ற நிலையில் அதற்கான ஆயத்தங்களை தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது.
இம்முறை தேர்தல் தினத்தன்று வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட மாட்டாது என தெரிவித்திருந்த நிலையில் ஓகஸ்ட் 6ம் திகதி காலை 8 மணி முதலே அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இப்பின்னணியில் மாலை 4 மணியளவிலேயே தேர்தல் முடிவுகளை வெளியிட ஆரம்பிக்க முடியும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஜுலை 14 - 21 காலப்பகுதியில் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment