கடந்த நவம்பரில் ஜனாதிபதி கனவு கலைந்தது போன்று ஓகஸ்ட் 6ம் திகதி சஜித் பிரேமதாசவின் பிரதமர் கனவும் கலையும் என தெரிவிக்கிறார் பிரசன்ன ரணதுங்க.
மஹிந்த - கோட்டா அரசுக்கே நாட்டை சரியான முறையில் அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முடியும் எனவும் வேறு யார் இரு பதவிகளுள் ஒன்றைக் கைப்பற்றினாலும் நாடு முடங்கிப் போகும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த காலத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்ததின் பயனை மக்கள் அனுபவித்து விட்டார்கள் எனவும் ஓகஸ்ட் 6ம் திகதி மஹிந்த பிரதமராவதை யாரும் தடுக்க இயலாது எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment