கடந்த வருடம் ஈஸ்டர் தாக்குதலையடுத்து இடம்பெற்றிருந்த சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கான மாநாட்டில் வைத்து கிறிஸ்தவ சமூகத்துக்கு உலக முஸ்லிம் லீக் சார்பில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தமக்கு வந்து சேரவில்லையென கத்தோலிக்க தேவாலய தரப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளது.
உலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் முஹமது பின் அப்துல் கரீம் அல் ஈஸா இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மாதிரி காசோலையொன்றை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்துமிருந்தார்.
எனினும் அது தொடர்பில் கிறிஸ்தவ சமூகத்துக்கு எதுவும் தெரியாது எனவும் கடந்த அரசாங்கம் அந்த நிதியைப் பெற்றுக்கொண்டதா என்பதும் தெளிவில்லையென ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அனுமதியின்றி மேடையேறிய ஒமல் பே தேரரினால் கடந்த வருடம் ஜுலை மாதம் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வில் சலசலப்பு ஏற்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment