முகாம்களில் தொடர்ந்தும் 5240 பேர் - sonakar.com

Post Top Ad

Friday, 5 June 2020

முகாம்களில் தொடர்ந்தும் 5240 பேர்


கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களில் தொடர்ந்தும் 5240 பேர் தங்கியிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியோர் பல தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சுமார் 45 முகாம்களில் இவ்வாறு 5240 பேர் தங்க வைக்கப்பட்டிருப்பதாக இராணுவத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இறுதியாகப் புதுப்பிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் இதுவரை மொத்தம் 1797 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை அதில் 858 பேர் குணமடைந்துள்ளதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இப்பின்னணியில் தொடர்ந்தும் 928 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment