ஓகஸ்ட் 5ம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது தேர்தல் ஆணைக்குழு. ஏலவே இரு தடவைகள் பின்போடப்பட்டிருந்த நிலையில் புதிய தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 2ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா சூழ்நிலையால் இரு தடவைகள் தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டு பின் போடப்பட்டுள்ளது.
தற்சமயம் நாட்டில் கொரோனா தாக்கம் இல்லையென அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் புதிய தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment