சுமார் 48000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் வில், அம்புக்கான ஆயுத உபகரணங்கள் மற்றும் குரங்கின் எலும்புகளால் உருவாக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆபிரிக்காவுக்கு வெளியில் இவ்வாறான தொன்மையான கருவிகள் இலங்கையிலேயே கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள பாகியன் குகை பகுதியில் இப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பல்கலை மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் குழுவினரால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆதி கால மனிதர்கள் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆடைகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்திய கருவிகளுக்கான அடையாளங்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment