பெற்றோலியம் கூட்டுத்தாபனத்துக்கு அரசு 33,400 கோடி கடன்! - sonakar.com

Post Top Ad

Saturday, 27 June 2020

பெற்றோலியம் கூட்டுத்தாபனத்துக்கு அரசு 33,400 கோடி கடன்!


இவ்வருடம் மார்ச் 31ம் திகதி வரையான காலப்பகுதியில் அரசாங்கத்துக்கு எரிபொருள் வழங்கிய கட்டணம் 33,400 கோடி ரூபா நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரையான அனைத்து அரசுகளிலிருந்துமான மொத்த கட்டண நிலுவையே இதுவெனவும் மின்சாரம், போக்குவரத்து மற்றும் கடற்றொழில் போன்ற தேவைகளுக்காக வழங்கப்பட்ட எரிபொருளுக்கான கட்டணங்களே இவையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அரசும் அரச நிறுவனங்களுக்கு பாரிய தொகை இழப்பை ஏற்படுத்தி வருகின்ற வரலாறு தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment