எதிர்வரும் ஜுன் 27ம் திகதி முதல் சினிமா திரையரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார வழிகாட்டல்களைப் 'பேணி' திரையரங்குகளை இயக்கலாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாதமளவில் சமூக மட்டத்தில் கொரோனா பரவல் இல்லையென்பதன் அடிப்படையில் நாட்டை வழமைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளிக்கப்படுகிறது.
மார்ச் மாதம் கொரோனா பரவல் அபாயத்தின் பின்னணியில் திரையரங்குகளும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment