நேற்றும் கட்டாரிலிருந்து வந்த 27 பேருக்கு தொற்று! - sonakar.com

Post Top Ad

Wednesday, 3 June 2020

நேற்றும் கட்டாரிலிருந்து வந்த 27 பேருக்கு தொற்று!


நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தோரில் 27 பேர் கட்டாரிலிருந்து நாடு திரும்பியவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலம் மூவர் குவைத்திலிருந்து வந்தவர்கள் என்பதோடு ரஷ்யா மற்றும் அமீரகத்திலிருந்து நாடு திரும்பியோரும் இதில் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் ஹோமாகமயில் வசித்து வந்த அவரது மனைவி மன்றும் பிள்ளைக்கும் தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் இவர்களோடு நெருங்கிப் பழகிய மேலும் ஒரு குடும்பமும் அப்பகுதியிலிருந்து தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்  வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment