ஒரே நாளில் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் வசதி ஜுன் 22ம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவினருக்கே புதிய தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளதாகவும் இறுக்கமான சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றப்படவுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் பத்தரமுல்லயில் நாளொன்றுக்கு 250 பேருக்கும் காலியில் 50 பேருக்குமே அடையாள அட்டைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment