இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1869 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் இதுவரை 10 பேருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதுவரை 1162 பேர் குணமடைந்துள்ள அதேவேளை, தற்சயம் 736 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஐந்து கடற்படையினருக்கு தொற்றிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment