உலகளாவிய ரீதியில் ஒரே நாளில் அதிகமான தொற்றாளர்கள் பதிவான நாள் நேற்றைய (18) தினம் என தெரிவிக்கிறது உலக சுகாதார அமைப்பு.
150,000 புதிய தொற்றாளர்கள் நேற்று உலகளாவிய ரீதியில் பதிவாகியுள்ளதாகவும் அரைப் பங்குக்கு மேல் அமெரிக்க பகுதிகளிலும் மேலும் மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் இவ்வாறு புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்றின் அடிப்படையில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த, கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரில் 40 வீதமானோர் நீரிழிவு நோய்ப் பாதிப்புள்ளவர்கள் எனவும் இவ்வாறானவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்பு அதிகம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment