ஸ்ரீலங்கனுக்கு தொடர் நஷ்டம்; 1500 பேரை நீக்க முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Monday, 15 June 2020

ஸ்ரீலங்கனுக்கு தொடர் நஷ்டம்; 1500 பேரை நீக்க முஸ்தீபு


சில வருடங்களே இலாபத்தில் இயங்கி வந்த ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் 2008ம் ஆண்டு எமிரேட்சினால் கைவிடப்பட்டதிலிருந்து தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாக ஆண்டறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இது தவிரவும், ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகளில் ஊழல்கள் இடம்பெற்றமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதோடு, அது குறித்த தகவல்களை வெளியிட்டிருந்த முன்னாள் முகாமையாளர்களுள் ஒருவரும் எழுத்தாளருமான ரஜீவ ஜயவீர அண்மையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கொரோனா சூழ்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக மேலும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் சுமார் 1500 பேரை நீக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பின்னணியில் இழப்பீட்டைப் பெற்றுக் கொண்டு சுய விருப்பில் ஓய்வு பெற விரும்பும் 1500 பேருக்கு அந்த வாய்ப்பை வழங்கப் போவதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கனின் 43.6 பங்குகளைக் கொள்வனவு செய்திருந்த எமிரேட்ஸ், நிறுவனத்தின் முகாமைத்துவத்தை முழுமையாகப் பொறுப்பேற்று செயற்பட்டு வந்த நிலையில் ஸ்ரீலங்கனின் சேவைத் தரமும் வெகுவாக உயர்ந்திருந்த போதிலும் மஹிந்த ராஜபக்ச அரசில் ஏற்பட்ட விரிசல்கள் முற்றி இரு தரப்பு ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment