அகில இலங்கை வை எம் எம் ஏ பேரவையின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட பணிப்பாளர் பௌஸ் ஏ காதர் அனுசணையுடன் கோவிட் 19 தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அத்தியாவசிய சேவையாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி, நவீன சுய பாதுகாப்பு உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.
வத்தேகம பொலிஸ் நிலையம் பாத்ததும்பர பிரதேச செயலகம் மற்றும் பொது சுகாதார சேவையாளர் உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பதில் தேசிய தலைவர் சஹீத் எம் ரிஸ்மி, முன்னாள் அகில இலங்கை வை. எம். எம். ஏ இன் தேசிய தலைவர் எச். சலீம்தீன், மடவளை வை எம் எம் ஏ தலைவர் பாத்ததும்பர பிரதேசத்தில் சபை உறுப்கள் ரியாஜ், அபூபக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-இக்பால் அலி
No comments:
Post a Comment