கொரோனா சூழ்நிலையில் மக்கள் ஒன்று கூட முடியாததால் கஹட்டோவிட்டவில் இம்முறை காணொளிப் பதிவுகள் ஊடான ஒன்லைன் விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றுள்ளது.
கஹட்டோவிட்ட விளையாட்டுச் செய்திகள் என்ற பெயரில் இயங்கும் வட்ஸப் குழுமத்தின் ஏற்பாட்டில் இத் திறமை காண் போட்டிகள் இடம்பெற்றுள்ளதோடு போட்டியாளர்களின் காணொளிப் பதிவுகள் ஊடாக மதிப்பீடுகள் இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர் அப்ஹாம் நிசாம் சோனகர்.கொம்முக்கு தெரிவித்தார்.
வயதெல்லைகள் அடிப்படையில் Football balancing, Skipping, Cricket ball balancing, Swan race, Frog race மற்றும் ஈத் குமாரன் தெரிவு போன்ற பொழுது போக்கு அம்சங்கள் இடம்பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.
கொரோனா சூழ்நிலையில் முடங்கியிருப்பினும், பெருநாள் தினத்தில் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் வாய்ப்பை உருவாக்கும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஏற்பாட்டுக்குழுவில் அங்கம் வகிக்கும் அஜ்மீர், அர்ஷாத், இன்ஷார், இர்ஷாத், முபீன், முகர்ரம், முஸ்தாக், ரய்யான், ரியாசி உட்பட அனுசரணையாளர்கள் மற்றும் பங்கேற்றவர்களுக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அப்ஹாம் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment