சிங்ஹலேவுக்கு வேண்டாமல் போயுள்ள 'அலி சப்ரி'! (video) - sonakar.com

Post Top Ad

Wednesday, 13 May 2020

சிங்ஹலேவுக்கு வேண்டாமல் போயுள்ள 'அலி சப்ரி'! (video)


https://www.photojoiner.net/image/VsLfNSbc

ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் நிலையில் இது வரை சிங்கள தீவிரவாத அமைப்புகளால் ஓரளவுக்கு போற்றப்பட்டு வந்த ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சிங்ஹலே அமைப்பு அவரை 'தக்கடியா' என வர்ணித்துள்ளது.

அல்-ஜசீரா செய்தி நிறுவனத்துக்கு, முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அலிசப்ரி, விஞ்ஞான ரீதியில் அவ்வாறு ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது குறித்து ஆட்சேபிக்க எதுவும் இல்லை (ஆனால் அவ்வாறு இல்லை) என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.

Ali Sabry, the president's counsel, said the government's cremation order was in disregard to guidelines by the World Health Organization (WHO).

"If the decision-makers, having considered all facts and aspects and have reached a decision based on scientific, medical or logical concerns, I have no issues with it and people must comply with it," he told Al Jazeera.


இப்பின்னணியிலேயே அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள சிங்ஹலே அமைப்பு அலி சப்ரியை மோசமான முறையில் இனவாத அடிப்படையில் தாக்கிப் பேசியுள்ளதுடன் அவர் குறித்து விமர்சனம் வெளியிட்டுள்ளது.

அலி சப்ரி இது குறித்து தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ள போதிலும் சிங்கள பேரினாவாத சக்திகள் மத்தியில் இது குறித்து பரவலான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment