ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கைது விவகாரம் இரு அணிகளாகப் பிரிந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைத்திருப்பதாக தெரிவிக்கிறார் அவரது புதல்வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சத்துர சேனாரத்ன.
இவ்வொற்றுமை ஊடாக மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி பலம் பெறும் எனவும் கோட்டாவின் ஆட்சி முடிவுக்கு வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுயாதீன நீதித்துறை இருப்பதால் அதனூடாக தனது தந்தைக்கு நீதி கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment