ஐக்கிய இராச்சியத்தில், ஹிஜாப் அணியும் முதலாவது முஸ்லிம் நீதிபதியாக நியமனம் பெற்றுள்ளார் ராபிஃயா அர்ஷாத்.
மிட்லன்ட்ஸ் பிரதேசத்தில் மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்றுள்ளா ராபிஃயா 17 வருடங்கள் சட்டத்துறையில் அனுபவம் பெற்ற பரிஸ்டர் ஆவார்.
மேற்கு யோர்க்ஷயரில் வளர்ந்த ராபிஃயா (40), தனது நியமனம் முஸ்லிம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும் என்றும் உயர் நிலைகளை அடைவதற்கு ஹிஜாப் அணிதல் தடையாக இருக்காது என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment