ஐக்கிய இராச்சியம், வட்போர்ட் பகுதியில் வாழும் இலங்கை முஸ்லிம் சமூகம் அப்பகுதியின் தேசிய வைத்தியசாலையில், கொரோனா சூழ்நிலையிலும் அயராது உழைக்கும் ஊழியர்களுக்கான விசேட உணவு விநியோக நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.
வட்போர்ட் இலங்கை முஸ்லிம் சமூக அமைப்பினரால் வட்போர்ட் பொது வைத்தியசாலையில் பணி புரியும் சுமார் 300 ஊழியர்களுக்கு இவ்வாறு உணவு மற்றும் குளிர்பானம் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதனை வைத்தியசாலை நிர்வாகம் பாராட்டி ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து சோனகர்.கொம்முக்கு விளக்கமளித்த குறித்த அமைப்பினர், குறித்த பகுதி சுகாதார சேவை ஊழியர்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் சார்பில் கட்டாயம் பங்களிப்பொன்றை செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்து இப்பணியைச் செய்ததாகவும் அதற்கான வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதாகவும் தெரிவித்திருந்தனர்.
No comments:
Post a Comment