ஐரோப்பாவில் பரபரப்பான கொரோனா மரணங்கள் இத்தாலியிலேயே இடம்பெற்றிருந்த போதிலும் இன்றைய புள்ளிவிபரத்தின் படி ஐக்கிய இராச்சியம் இத்தாலியை மிஞ்சியுள்ளது.
இச்செய்தி பிரசுரிக்கப்படும் தருணத்தில் ஐக்கிய இராச்சியத்தில் உயிரிழப்பு 29,427 என அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை இத்தாலியில் 29,315 ஆகும்.
ஐக்கிய இராச்சியத்தில் தேசிய வைத்தியசாலைகளில் இடம்பெற்ற உயிரிழப்புகளும், பராமரிப்பு நிலையங்களில் இடம்பெற்ற உயிரிழப்புகளும் தனித்தனியாகப் பதியப்பட்டு வரும் நிலையில் இரு பக்கத்தின் கூட்டுத்தொகையும் அண்மையிலேயே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்சமயம் ஐக்கிய இராச்சியத்திலேயே அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment