திங்கள் முதல் SLTBயின் பிரத்யேக தூர பயண 'சேவை' - sonakar.com

Post Top Ad

Sunday, 10 May 2020

திங்கள் முதல் SLTBயின் பிரத்யேக தூர பயண 'சேவை'


மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு மீளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் திங்கள் (11) முதல் அலுவலக ஊழியர்களுக்கான தூர பயண சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது போக்குவரத்து சபை.

1500 பேருந்துகள் இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வெளியிடங்களில் உள்ள தமது ஊழியர்களின் போக்குவரத்தை ஏற்பாடு செய்ய விரும்பும் நிறுவனங்கள் இலங்கை போக்குவரத்து சபையூடாக இதனை ஏற்பாடு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்களுக்கே இச்சேவை வழங்கப்படுகின்ற அதேவேளை, பொது மக்கள் மாவட்டங்களுக்கிடையில் பயணிப்பதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment