தனது வாகனம் செல்வதற்கு இடம் தரவில்லையென குற்றஞ்சாட்டி அம்புலன்ஸ் சாரதியொருவரை மறித்து தாக்கிய சுகாதார அதிகாரி மற்றும் அவரது சகாவை நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
கொழும்பிலிருந்து அநுராதபுர போதனா வைத்தியசாலைக்கு பயணித்துக் கொண்டிருந்த அம்புலன்ஸ் சாரதியே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதுடன் அவரது 45000 ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியையும் அடித்து நொறுக்கியுள்ளதாக PHI மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கொரோனா சூழ்நிலையில் சுகாதார அதிகாரிகள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவதுடன் பல இடங்களில் எல்லை மீறிய செயற்பாட்டினால் மக்களுடன் பிணக்குகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment